திருச்சியில் டாக்டர் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி

திருச்சி: திருச்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்ற நபர் டாக்டர்கள் மீது எச்சில் துப்பியதையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்ததுடன், டாக்டர் மீது எச்சில் துப்பி, மாஸ்க்கை வீசி எறிந்துள்ளார்.